HOW TO STUDY A/L SCIENCE STREAM SUBJECTS_ B.M.Faslin BSc (Reading)






அஸ்ஸலாமு அலைக்கும்
ஒவ்வொரு மாணவரும் அவருடைய இலக்கை அடைய சில விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும்

01)ஆசை
02)நம்பிக்கை
03)விடாமுயற்சி
04)பொறுமை
05)தியாகம்
06)திட்டமிடல்

நாம் வெறுமெனே பிறர் படிக்கின்றனர் என்பதற்காக அல்லது நேரத்தை கடத்துவதற்காக படிக்க கூடாது படிப்பதற்கான ஆசை வரவேண்டும் அதற்காக சமூகத்தில் படித்து உயர்ந்த அந்தஸ்த்துக்கு வந்தவர்களையும் படிப்பின் அனுகூலங்களை சற்று சிந்தித்தால் ஆசை வரும்

ஒருவருக்கு தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவருக்கு இலக்கை பற்றிய சிந்தனை, முயற்சி

இருக்காது எனவே நான் எனது இலக்கை அடைவேன் என உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் நாம் நமது சகல்வி செயற்பாடுகளை திருப்திகரமாக செய்யமுடியும்

நாம் படிக்கின்ற சில பாடகங்களில் தெளிவின்மை ஏற்படலாம் அதன் காரணமாக அந்த பாடத்தில் வெறுப்பை காட்ட வேண்டாம் அந்த பாடத்தை விளங்க அந்த பாடம் சம்பத்தப்பட்ட ஆசிரியரை நாடி தெளிவு பெற முயற்சி செய்யுங்கள் . மீண்டும் மீண்டும் முயற்சிங்கள் நிச்சயம் விடாமுயச்சி உங்களை கைவிடாது அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.

நாம் படிக்கின்ற சமயங்களில் எமது குடும்பத்தில் சில பிரச்சைனைகள் வரலாம் பண ரீதியாகவும், மனரீதியாகவுபம், குடும்பத்தில் மரண சம்பவங்களால் உங்கள் கல்வியில் தடம் புரல்வுகள் நடைபெறலாம்

இதனால் நீங்கள் இறை நம்பிக்கை உடையவராகவும் பிரச்சினைகளை கண்டு இலக்கை கைவிடக்கூடாது பொறுமையாக இறைவனிடத்தில் உதவியை நாடுங்கள்

நாம் எமது கல்விக்கான நேரத்தை தியாகம் செய்ய வேண்டும். எமது நித்திரை சந்தோசங்களை இரண்டரை வருங்கள் தியாகம் செய்யுங்கள் இன்ஸா அல்லால் அதன் பின்னர் உங்கள் வாழ்க்கை சந்தொசமாக அமையும்.உங்களை நம்பி உங்கள் குடும்பமும் , சமூகமும் நம்பி இருக்கின்றது எனவே உங்கள் பங்களிப்பை வழங்க நீங்கள் நேரங்களையும் சந்தோசங்களையும் தியாகிக்க வேண்டும்

பாடங்களை திட்டமிட்டு படிக்க வேண்டும் பாடங்ஙளை வெறுமெனே மனனம் செய்யக்கூடாது அனேக மாணவர்கள் பாடங்களை மனனம் செய்கின்றனர் குறிப்பாக உயிரியல் பாடத்தில் மனனம் செய்கின்ற மாணவர்களால் A சித்தி அடைய முடியாது ஏனேன்றால் சற்று வித்தியாசமாக வினா எழுப்பினால் அவர்களால் அவ்வினாவை செய்யமுடியாது எனவே பாடங்களை விளங்கி கற்க முயற்சி செய்யுங்கள் கடந்த கால வினாக்களை நன்கு தெளிவாக செய்யுது பாருங்கள். கடந்தகால வினாக்கள் செய்யும்போது அதில் இருந்து புதிய வினாக்களை நீங்கள் உருவாக்கி அதற்குரிய விடையை நீங்களே எழுதி

ஆசிரியரிடம் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.சில பாடங்கள் மறதியாக இருந்தால் உங்களுக்கென short ஆக chart போட்டு படிக்கின்ற இடங்களில் ஒட்டி அடிக்கடி பாருங்கள் இலகுவில் பதியும்.


                                                                                 B.M.Faslin BSc (Reading)

                                                                             

Post a Comment

Previous Post Next Post