உயிரியல் பிரிவு மாணவர்களுக்கும் ஆசியர்களுக்கும் அன்பான வேண்டுகோள்!!


உயிரியல் பிரிவு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அன்பான வேண்டுகோள்!!

வழமையாக நடைபெறுகின்ற தவணை பரிட்சைக்காக பாடசாலைகளில் எடுக்கப்படுகின்ற உயிரியல் வினாத்தாள்களில் வினாக்கள் சில  பழைய பாட திட்டத்தை உள்ளடக்கியதுடன் வள நூலை மீறி அமைகின்றமையினால் மாணவர்கள் சிறந்த புள்ளிகளை எடுக்க தவறுகின்றனர். இதனால் மாணவர் மனநிலை பாதிப்பதுடன் மாணவர்கள் உயிரியல் பாடத்தில் திருப்தியற்றவர்களாக மாறுவதுடன் இவ்வாறான வினாக்களை செய்வதற்காக பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படாத ஆழமான விடயங்களை கற்க முற்படுகின்றனர் இதனால் மாணவர்கள் பின்வரும் நிலைமைகளுக்கு தள்ளப்படுவர்
1) பாட உள்ளடக்கத்தில் உள்ள முக்கிய விடயங்களை அறிய தவறி விடுவார்கள்
2) சிரமத்துடன் கற்பர்
3) பாடத்தில் வெறுப்பை அடைவார்கள்
4) தேவையற்ற விடயங்களை கற்பதனால் ஏனைய பாடங்களை கற்பதற்கான நேரம் குறைவடையும்
5) இறுதி பரிட்சையில் சிறந்த சித்தியை அடைய தவறுவர்  
                         
எனவே பாடசாலை ஆசியர்களும் அதிபர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி சிறந்த பரீட்சை வினாத்தாள்களை தவணை பரிட்சைகளுக்கு வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன்

இப்படிக்கு 
B.M.Faslin
University of Jaffna


2 تعليقات

إرسال تعليق

أحدث أقدم