பௌதீகவியல் பரீட்சை வினாக்களின் பின்னணி

பௌதீகவியல் பரீட்சை வினாக்களின் பின்னணி


பௌதிகவியலுக்கு என்றும் ஒரு தனித்துவம் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.

அவ்வாறுதான் பரீட்சை வினாக்களுக்கும் சில தனித்துவமான பண்புகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சமகால நிகழ்விவுகளுடன் தொடர்புபட்டு வரும் வினாக்கள்.

வெறுமனே புத்தகப்பூச்சியாய் இருக்கும் பட்சத்தில் சில வினாக்களை உங்களால் திறமையாக உள்வாங்குவது கடினமாக இருக்கும். ஏற்கனவே எங்கோ கேள்விப்பட்ட விடையம் வினாக்களாக கேட்கப்படும்போது எங்களுக்கு வினாவை உள்வாங்குவது மிக இலகுவானது. எனவே அவ்வினாவிற்கு திருப்தியாக விடையளிக்க முடியும்.

இவ்வாறு சமகாலத்தில் இடம்பெற்ற கண்டுபிடிப்புகள், சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புபட்ட நிறைய வினாக்கள் பௌதீகவியல் இறுதி பரீட்சையில் கேட்கப்பட்டுள்ளன.

அவற்றில் சில பின்வருமாறு...

1)




2010 August 5 "chile mining accident"

"2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி சிலி நகரத்தின் 700m ஆழத்தில் தங்க சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 33 பேர் உள்ளே மாட்டிக்கொண்டனர். அவர்கள் underground capsule மூலம் 69 நாட்களின் பின் மீட்கப்பட்டனர்.

2011ம் ஆண்டு முதலாவது பொறியியல் கட்டுரை வினா இதுபற்றியது."

2)



2015 April 25 "Nepal earthquake"

" 2015ம் ஆண்டு நேபாளில் இடம்பெற்ற மிகப்பாரிய நிலநடுக்கத்தினால் 9,000 பொதுமக்கள் பரிதாபமாய் மரணித்து 22,000 பேர் படுகாயத்திற்காளான பரிதாபமான சம்பவம் இடம்பெற்றது.

2015ம் ஆண்டு பௌதீகவியல் பரீடசையில் கேட்கப்பட விவரண வினா நிலநடுக்கம் பற்றியது. நிலநடுக்கம் ஏற்பட்ட புள்ளியை இனம்காண்பது பற்றியதாகும்."

3)




2017 April "meethotamulla garbage dumpling incident"

"2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெல்லம்பிட்டிய, மீத்தோட்டுமுல்லை பகுதியில் குப்பைமேடு சரிந்ததால் பாரிய சேதம் ஏற்பட்டது நாம் யாவரும் அறிந்ததே.

2017ம் ஆண்டு பௌதீகவியல் விவரண வினா மண்சரிவு, பற்றியது." இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

எனவே, அன்பாரந்த மாணவர்களே...

படிப்பு மட்டும் என்று ஒருபொதும் இருந்துவிட வேண்டாம்.எம்மை சுற்றி நடக்கும் அனைத்தும் பௌதீகவியல் தான். ஆண்கள் தென்னைமரம் ஏறுவதில் இருந்து பெண்கள் தேங்காய் துருவுவது வரை அனைத்தும் பௌதீகவியல் தான். கற்றவிடயங்களை நடைமுறை வாழ்வுடன் தொடர்பு படுத்தும் போது மனதில் ஆர்வம் பொங்கும், படித்த விடயம் தெளிவாகும்.

"நேற்று BLACKHOLE ன் புகைப்படம் வெளியாகியுள்ளது. சில வேளை இவ்வருடமோ அடுத்த வருடமோ BLACKHOLE சம்பந்தப்பட்ட வினா கேட்கப்படலாம்.




GRAVITATIONAL WAVES, GRAVITATIONAL FIELD அல்லது MATTER AND RADIATION சார்ந்த விவரண வினாவாகவும் இது வரலாம்."

இப்படியான சில விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்.

PHYSICS IS SIMPLE

தொடரும்....


N.A.MOHAMED
Chemical Engineering (Institute of technology, university of moratuwa)(R)
B.Tech Mechatronics Engineering (Hons) (R) 

இதுபற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் telegram மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
Username:- http://t.me/Mr_p6

Post a Comment

أحدث أقدم