நாம் கூறுவதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

நாம் கூறுவதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

—— —— —— —— —— —— —— ——

பரிதாபமாக தோற்கப்போகின்றவர்கள். 

Online கல்வி முறையால் நாட்டில் எந்த பாகத்திலிருப்பவர்களும் யாரிடமும் கற்றுக் கொள்ள இயலும். 

Online class, recorded videos, pdf notes, modal paper, past paper softcopy, motivational clips என்பவற்றிற்கு பஞ்சமே கிடையாது. 

Input அனைத்தையும் saved messages, cloud , storage என்பவற்றில் சேமித்துக் கொண்ட பலர்  அதை கிரகித்து விளங்கி எடுக்கும் வழியை தவற விட்டுள்ளார்கள். 

இங்கு புள்ளிகள் கிடைப்பது எவ்வளவு input என்தால் அல்ல. 
எவ்வாறான processing என்பதால் மட்டுமே. 
முறையான வழிகாட்டலுடன் சொந்தப்பயிற்சியால் இதை பெறலாமே தவிர வேற எதனாலும் இதை பெற்றுக் கொள்ளவே இயலாது. 

இன்னாரிடம் படிக்கிறேன், மாதாந்தம் இவ்வளவு பணம் கட்டிப் படிக்கிறேன், இன்ன device use பண்ணி படிக்கிறேன் என்பது எந்த மகத்துவமும் தராது. 

Android இல் படிப்பதை விட iPad இல் படிப்பதால் எனக்கு நன்றாக விளங்குகிறது என ஒருவர் சொன்னால் நாம் அவரை முட்டாளாகத்தானே பார்ப்போம். 

நாட்டில் பிரபலமான இடத்தில் படித்தவர்கள் மட்டுமல்ல குக்கிராமத்தில் படித்தவர்களும் உச்ச கட்ட பெறுபேறை பெற்றுள்ளார்கள் என்பதே உண்மை. 

நடக்கப் போகும் பரீட்சை வினாத்தாளை கொண்டு வந்து மூடிய அறையில் வைத்து முழுமையாக விளக்கி விட்டு பரீட்சை மண்டபத்தில் அதே வினாத்தாளை மீண்டும் செய்யும் படி கேட்டால் எத்தனை பேரால் குறைந்தது 80% புள்ளிகளையாவது பெற இயலும் ??

அதே வினாத்தாளுக்கே இந்த நிலை என்றால் புதிய ஒரு வினாத்தாளை யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் எவ்வாறான பயிற்சியை செய்தீர்கள் என்பது மட்டுமே உங்கள் புள்ளியில் ஏற்படும் இழப்பை இழிவளவாக்கும். 

Island rank 1 எடுத்தவர் படித்த அதே இடத்தில் தான் நானும் படிக்கிறேன் என்பதோ island rank 1 எடுத்தவர் உண்ட அதே உணவைத் தான் நானும் உண்கிறேன் என்பதோ island rank 1 எடுத்தவர் போடும் அதே உடுப்பை தான் நானும் உடுக்கிறேன் என்பதோ island rank 1 எடுத்தவர் பாவித்த அதே brand pen ஐ தான் நானும் பாவிக்கிறேன் என்பதோ துளியளவும் கூட பிரயோசனத்தை பெற்றுதராது. 

ஆனால் அவர் எடுத்த அதே பயிற்சியை நீங்கள் ஆரம்பத்திலிருந்து எடுத்து பரீ்சைக்கு முன் அவர் அடைந்த சுய மதிப்பீட்டின் பெறுமானத்தை நீங்கள் அடைந்தால் உங்க்ளாலும் அந்த இலக்கை அடைய கூடியதாக இருக்கலாம். 

கடந்த 10 வருடத்தில் island rank 1 எடுத்த 10 பேரின் கற்றல் முறைகளை நீங்கள் விசாரித்தால் 100% அனைத்தும் சமமாக இருக்காது. ஆனால் அவர்கள் அனைவரும் முறையாக விடாத பயிற்சியை எடுத்திருப்பார்கள் என்பது பொதுவாக இருக்கும். 

அவர்கள் படித்த அதே இடத்திற்கு நானும் படிக்க போகிறேன் என்று பெட்டியை கட்டிக் கொண்டு கிளம்பி நல்ல பெறுபேறு பெற்றவர்களும் உண்டு. 
வெறுங்கையோடு திரும்பியவர்களும் உண்டு.

பல்கலைக்கழகம் தெரிவானதும் junior மாணவர்கள் வந்து வழிகாட்டக் கேட்கும் போது தான் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியை மறைத்து படிக்காமலே இந்த பெறுபெற்றதாக கூறி தான் பிறவியிலேயே அதிபுத்தசாலித்தனமான அருட்கொடை மாணவனாக தன்னை காட்டிக் கொண்ட ஈனத்தனமாணவர்களின் வழிகாட்டுதலின் பின்னால் சென்று மடுபட்டவர்களையும் படிக்கும் காலத்தில் நான் கண்டதுண்டு. 

இங்கு வெற்றி பெறுவதற்கு முறையான விடாத பயிற்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். 

இதன் தாற்பரியம் இரு இடங்களில் விளங்கும் 
01. பரீட்சை மண்டபத்தில்
02. Results வெளிவரும் போது

தன்னுள் சுயபயிற்சி செய்யாமல் நல்ல input ஆல் நல்ல results கிடைக்கும் எனும் ஒற்றை நம்பிக்கையிலும் கர்வத்திலும் இருப்பவர்கள் பரிதாபமாக தோற்பது உறுதி. 

அவர் எவ்விடம் படித்தாலும் சரி. யாரிடம் படித்தாலும் சரி. 



Post a Comment

Previous Post Next Post